மாற்று சிந்தனையுடன் இந்த நாட்டினை கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் – சந்திரகாந்தன்

இந்த நாட்டின் பொருளாதாரம் தாழ்த்தப்படவேண்டும் என்று செயற்படுகின்ற அரசியல் சக்திகளின் மத்தியிலேயே மாற்று சிந்தனையுடன் இந்த நாட்டினை கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழான சௌபாக்கிய உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து கிராமங்கள் சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் பனம்பொருள் உற்பத்திக்காக தெரிவுசெய்யப்பட்டது.

சின்னஊறணி,சத்துருக்கொண்டான்,பனிச்சையடி,கொக்குவில்,திராய்மடு ஆகிய கிராமங்களில் இந்த உற்பத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன்,பனை அபிவிருத்தி சபையின் மாவட்ட இணைப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழான சௌபாக்கிய உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 91இலட்சம் ரூபா பனம்பொருள் உற்பத்தி செயற்பாட்டுகளுக்காக ஒதுக்கீசெய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற 127 யுவதிகள் இனங்காணப்பட்டு இந்த நிகழ்ச்சி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான பயிற்சிகள் பனை அபிவிருத்தி சபை ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.” என தெரிவித்தார்.

Leave a Reply