வன்முறையை தவிர்த்து அமைதியான அரசியல் மாற்றத்தை உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
அனைத்து தரப்பினரும் உயிர்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன் அரச சொத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதேவேளை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் மனித உரிமைகளை மதித்து செயற்படுவதுடன் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது
பிறசெய்திகள்





