
அமெரிக்கா,ஜுலை 13
அமெரிக்காவுடனான எல்லைப் பகுதியினை நவீனமயப் படுத்துவதற்காக மெக்ஷிகோ 1 தசம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி joe biden மற்றும் மெக்ஷிகோ ஜனாதிபதி Andrés Manuel López Obrador ஆகியோருக்கிடையில் வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போதே மெக்ஷிகோ ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ எல்லைப் பகுதியினை கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் இரு நாட்டு ஜனாதிபதிகளும் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன,





