இரு குழுக்களுக்கிடையில் மோதல் – நால்வர் படுகாயம்!

காவத்தை, வட்டாபொத்த தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த தோட்டத்துக்குள் புகுந்த சிலர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொத்துக்களுக்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த நபர்களையும் தாக்கிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காதல் விவகாரமே மோதலுக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்! சிறீதரன்

Leave a Reply