கிராமியப் பதிவாளர் நியமனங்களுக்கான நேர்முகத்தேர்வு

கிராமியப் பதிவாளர் நியமனங்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று இடம்பெற்றுள்ளது.

மாந்தை கிழக்கு பனங்காமம் பிரிவு, கரைதுறைப்பற்று கரிக்கட்டு மூலை தெற்கு பிரிவு, ஒட்டுசுட்டான் கருநாவல்பற்று தெற்கு பிரிவு மற்றும் கற்சிலைமடு பிரிவு ஆகிய நான்கு கிராமியப் பதிவாளர் நியமனங்களுக்கான நேர்முகத்தேர்வு, பயணக்கட்டுப்பாடு காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் அறிவித்திருந்தார்.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை (23.08.2021) நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வே, இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வானது, இன்று காலை 8.30 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply