மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 21 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, நாட்டில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 527 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து 366 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,604 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply