கிளிநொச்சியில் வடக்கு மாகாண பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வடக்கு மாகாண பொலிஸ் அதிகாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல், பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமைகள், பொலிஸ் துறையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டமையுடன், வடக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

Leave a Reply