கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது-மன்னாரில் சம்பவம்…!

மன்னார்-மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் பட்டா ரக லொறி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா பொதியினை நேற்று புதன் கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் பொலிஸ் குழுவினர் மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு சென்ற பட்டா லொறி மற்றும் சந்தேக நபர்கள் இருவர் நேற்று புதன் கிழமை (13) இரவு 9.30 மணியளவில் குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் கைது செய்துள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட இரு நபர்கள் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய நபர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பட்டா லொறி மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply