மட்.கரடியனாறு மகா வித்தியாலத்திற்கு நிழற்பிரதி இயந்திரம் வழங்கிவைப்பு!

கரடியனாறு மகா வித்தியாலயத்திற்கு நிழற்பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஆசிரியருமான திருமதி. விஜயலெட்சுமி ஜீவரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக இலண்டன் வாழ் பழைய மாணவர்களான வீ.பத்பமநாதன், ம.குணரெத்தினம், கு.ரமேஸ், சீ.விஜயகுமார், நி.சுபேந்தினி, கோ.சிந்துஜா ஆகியோரின் அன்பளிப்புடன் பாடசாலை பழைய மாணவர் அமைப்பினூடாக பாடசாலை அதிபர் திரு. செந்தில்நாதனிடம் வழங்கிவைக்கப்பட்டது.

அமரர் திருமதி. விஜயலெட்சுமி ஜீவரெத்தினம் குடும்ப உறுப்பினர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர் .யு.ஜெயக்குமணன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர். கே. காந்தி ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

இன்றைய அசாதாரண (கொவிட் – 19) நிலையில் இவ்வியந்திரத்தை வழங்க உதவி செய்த அனைவருக்கும் மற்றும் இந்த கால கட்டத்தில் நேரத்தை ஒதுக்கி எமது அழைப்பையேற்று வருகை தந்த முன்னாள் அதிபர் திருமதி விஜயலெட்சுமி ஜீவரெத்தினம் அவர்களின் குடும்பத்திற்கும் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் .யு.ஜெயக்குமணன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர். கே. காந்தி மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும்; பழைய மாணகள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு இனிவரும் காலங்களிலும் பாடசாலை அதிபருடன் இணைந்து இதுபோன்ற மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் பாடசாலை அபிவிருத்திகளுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என நிகழ்வின் ஒருங்கிணை;பபாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply