மலிந்த தேங்காய் கொப்பறாவாகி எண்ணையாகிறது!(படங்கள் இணைப்பு)

எரிபொருள் நெருக்கடி காரணமாக உணவுப் பொருள்கள் யாவும் உச்சவிலையில் உள்ளன. ஆனால் வட பிரதேசத்தில் தேங்காய் மட்டும் சகாயவிலை எனச் சொல்லுமளவுக்குக் குறைவாக உள்ளது.
மாரி முடிந்தவுடன் புதிதாகத் தள்ளிய பாளைகள் குரும்பை பிடித்துத் தேங்காயாகும். ஆனி,ஆடி மாதங்களில் அடிக்கும் பலத்த காற்றால் தேங்காய்கள் பொல பொலவென விழுந்து கொள்ளும். இதனால் தேங்காய்களின் விலை மலிவாக இருப்பது வழக்கம்.
தேங்காய்களை விற்றுக் குறைந்த வருவாயைப் பெறுவதனை விட கொப்பறாவாக்கித் தேங்காயெண்ணை வடிப்பதனைத் தென்னைச் செய்கையாளர்கள் விரும்புவார்கள். மாரி காலங்களில் தேங்காய் எண்ணையின் விலை உயர்வாக இருப்பது வழக்கம்.

வழமை போல இம் முறையும் தேங்காய்களை உடைத்துக் கொப்பறாவாக்கும் வேலைகள் பரவலாக நடைபெறுகின்றன.

பிறசெய்திகள்

Leave a Reply