ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பாத நிலையில், இது தொடர்பில் அனைவரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வினவி வருவதால் அவர் மனஅழுத்ததிற்கு உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேநேரம், பதில் ஜனாதிபதி ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் இராஜினாமா கடிதத்தை வழங்காவிட்டால், அவர் பதவியில் இருந்து விலகியவராக கருதப்பட்டு அதற்கான சட்ட ஆலோசனைகள் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்





