நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் உடுமுல்ல பிரதேசத்தின் கஹடபிடிய வாவியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

கொல்லாதெணிய, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்

சிறுவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மடுல்ல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மடுல்ல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில், தம்பல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply