கொரோனாவால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 20 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,449 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 529,755 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதேபோல், கொரோனாத் தொற்றில் இருந்து மேலும் 354 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 491,958 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply