புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான கடை ஒன்று அடித்து உடைக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான காணியை சுவீகரிப்பு செய்யும் நோக்கோடு குறித்த கடைக்கு ஒருவர் தீ வைத்துள்ளதாகவும், குறித்த கூல்பார் கடையின் உள்ளே இருந்த தளபாடங்களை அடித்து உடைத்தமையின் பின்னரே கடை எரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.தணிகாசலம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கடை நடத்திவந்த நபரால் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


