கால்வாயில் தேங்கும் கழிவு நீரினால் மக்கள் அவதி!

விசுவமடு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார பணிமனையின் கீழ் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் உள்ள சிறுகுளத்திலிருந்து கழிவு நீர் சந்தையினுடாக வெளியேறுகின்றது.

இதன் காரணமாக தொற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

விசுவமடு சந்தையின் உள்ள பகுதியில் ஊடாக ஊடறுத்து வரும் கழிவு வாய்க்காலானது விசுவமடு ஊடாக கிளிநொச்சி மாட்டத்தின் பிரமந்தனாறு பகுதியில் உள்ள கால்வாயில் கலக்கின்றது.

இதனால் விசுவமடு சந்தையில் அகற்றப்படும் கழிவுகள், வெளியேரும் கழிவுநீர் உள்ளிட்டவையும், ஏனைய வியாபாரிகளின் கழிவுகள் இக்கழிவு வாய்க்காலில் வீசப்படுவதால துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கழிவுகள் மழைகளங்களில் மக்களின் குடியிருப்புக்களுக்குள் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply