முகநூல் வழியாக இடம்பெற்ற மோசடியில் மாத்தறையை சேர்ந்த பெண்ணொருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் நட்பாக பழகி பணம் மோசடி செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர், வௌிநாட்டில் இருந்து டொலர் பார்சல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக பெண்ணுக்கு தெரிவித்து 129,000 ரூபாவை மோசடி செய்துள்ளார்.
33 வயதான சந்தேக நபரை நேற்று நுகேகொட பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆடை தொழிலில் தான் ஈடுபட்டு வருவதாக சந்தேகநபர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணினி குற்ற புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


