பாலின் விலையை 7 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானம்

நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு செலுத்தப்படும் ஒரு லீற்றர் பாலுக்கான விலையை 7 ரூபாயால் அதிகரிக்கவுள்ளதாக மில்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஒரு லீற்றர் பாலுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதன் விளைவாக பாலின் விலையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதால் பால் விநியோகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக மில்கோ நிறுவனத்தின் குறித்த அதிகாரி மேலும் கூறினார்.

Leave a Reply