பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தீர்மானம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து சங்கங்கள் இதற்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் திரு. மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் வாகனங்களின் உதிரி பாகங்கள் சடுதியாக உயர்ந்ததையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருளின் விலை ஏற்றத்தால் இத்தீர்மானம் எடுக்கப்படவில்லை.

அதனடிப்படையில், பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் இத்தகைய போக்குவரத்து கட்டணம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply