ரத்கம, ஹக்மன, மல்லாவி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, வெளிநாட்டு துப்பாக்கி, உள்நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா என்பவற்றுடன், ரத்கம பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹக்மன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடபீல்லகொட பிரதேசத்தில், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி மற்றும் 06 தோட்டாக்களுடன், புஹல்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேரக்கண்டால் பிரதேசத்தில், உள்நாட்டு துப்பாக்கியுடன், துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் நேற்று மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.






