கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தொடர்ந்து சேவைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
128 ரயில்களை சேவையில் இணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாவும் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி, மாத்தறை, பெலியத்த, காலி, சிலாபம் ஆகிய பகுதிகளுக்கு முதற்கட்டமாக சேவையை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.






