யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நாகபாம்பு கடிக்கு இலக்கான 15 வயது சிறுவன், தன்னை கடித்த நாக பாம்புடன் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.
நுணாவில் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்தபோதே பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து, அந்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து, பாம்பைப் பிடித்து போத்தலில் அடைத்துக் கொண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
மேலும், பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருக்கின்றார் எனத் தெரிய வருகின்றது.






