இரத்தினபுரி, கொலோன்ன பிட்டவெல பிரதேசத்தில் சிறுமியும், இளைஞர் ஒருவரும் சட்டவிரோதமான மின் இணைப்பு கம்பியில் சிக்கி உயிரிழந்தனர்.
கறுவாத்தோட்டம் ஒன்றுக்கு அருகில் காணப்பட்ட சட்டவிரோதமாக மின் இணைப்பு பெறப்பட்டிருந்த கம்பியில் சிக்கியதில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
சிறுமியும், இளைஞனும் முகநூலில் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளமையுடன், இளைஞன் நேற்றிரவு சிறுமியைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனை, வீட்டில் உள்ளவர்கள் கண்டுள்ளதுடன், அப்போது சிறுமியும் இளைஞனும் இருளில் ஓடிச் சென்ற போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதுதொடர்பில், கொலோன்ன பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.






