ஆயுதங்களுடன் வந்த நபர் இரு இளைஞர்கள் மீது தாக்குதல்!

களுத்துறை, பண்டாரகம வல்கம சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில், ஓட்டோவொன்றில் ஆயுதங்களுடன் வந்த நபரொருவர், இளைஞர்கள் இருவரது கைகளை வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இச் சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு இளைஞரின் ஒரு கை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய கை காயமடைந்துள்ளது.

அதேபோன்று, மற்றைய இளைஞரின் இடதுகை காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இரண்டு கைகளும் காயமடைந்த இளைஞர் வீதியில் மயங்கி விழுந்துள்ளமையுடன், மற்றைய இளைஞர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தகவலை வழங்கியுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடைய நபர் விளக்கமறியலில் இருந்துவிட்டு வீடு திரும்பியிருந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply