பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இரண்டு வாரத்தில் வெளியீடு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.

இம்முறை 44,000 மாணவர்களைப் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்களுக்கு இணைவதற்காக இம்முறை ஒரு இலட்சத்து ஐயாயிரத்திற்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply