யாழ். நவாலியில் உள்ள வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் இருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த வீட்டின் வேலியில் நேற்றுமுன்தினம் இரவு தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தது.
குறித்த வேலி சில நாட்களுக்கு முன்பே கட்டப்பட்டதாகும். இந்நிலையில், வேலிக்கு தீ வைத்த விசம செயல் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் 19 வயது, மற்றும் 21 வயதான இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.






