கொடிகாமத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை கடத்திச் சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இருவர் பட்டா ரக வாகனத்தில், நான்கு மாடுகளை ஓமந்தை பால் பண்ணைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுசென்றுள்ளனர்.
அவ்வேளை, கொடிகாமம் சந்தியில் வைத்து கொடிகாமம் பொலிஸார் வாகனத்தைச் சோதனையிட்டனர்.
இதன்போது, அனுமதிப்பத்திரம் இல்லாமல் மாடு கடத்திச் சென்றமை தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்களை நாளைய நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






