வவுனியாவில் 20 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைபாதை அமைக்கும் பணி நகரசபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், முதற்கட்டமாக வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து, பொதுவைத்தியசாலை சுற்றுவட்டம் வரையான வீதிக்கரையில் நடைபாதை அமைப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கை, 20 மில்லியன் ரூபாய் நிதியில், நகரசபையின் மேற்பார்வையில் துரிதமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நகசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.







