நாட்டில் மேலும் 12 பேர் கொரோனாவுக்கு பலி!

Coronavirus. COVID-19. 3D Render

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 12 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,484 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை 531,070 பேர் கொரோனத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனாத் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply