இலங்கையிலிருந்து வெளியேறவுள்ளவர்கள் தொடர்பில் புள்ளிவிபரம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும், 160ஆயிரத்து 158 இலங்கை குடிமக்கள் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுள்ளனர்.
ஒக்டோபர் 5 முதல் 15 ஆம் திகதி வரை ஒன்பது நாட்களுக்குள் 16,700 பாஸ்போட்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை ஒரு நாள் சேவை மற்றும் பொது சேவையின் கீழ் வழங்கியுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறவுள்ளவர்கள் வேலை, கல்வி மற்றும் நிரந்தரமாக தங்குவதறகாக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் -மைத்ரிபால சிறிசேன






