இலங்கையில் நேற்றைய தினம் 12 ஆயிரத்து 212 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இலங்கையில் நேற்றைய தினம் 12 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஆயிரத்து 348 பேருக்கு செலுத்தப்பட்டன.

அதேநேரம், சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஆயிரத்து 773 பேருக்கும்
சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 11 ஆயிரத்து 73 பேருக்கும் செலுத்தப்பட்டன.

மேலும் பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 607 பேருக்கும்
பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஆயிரத்து 241 பேருக்கும்  செலுத்தப்பட்டன.

அதேநேரம், மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 170 பேருக்கு செலுத்தப்பட்டது.

Leave a Reply