யொஹானியை சந்தித்து பாடல் கேட்டு மகிழ்ந்த ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் தற்போது பிரபலம் அடைந்துள்ள பாடகி யொஹானிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் மனைவி அயோமா ராஜபக்ஸவுடன் இணைந்திருந்தார்.

இச்சந்திப்பில், யொஹானி சில பாடல்களை பாடியுள்ளார். ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அவரின் பாடல்களை கேட்டு கைத்தட்டி மகிழ்ந்துள்ளனர்.

மெனிக்கே மகே ஹித்தே பாடல் பாடி புகழ் பெற்ற யொஹானி இந்தியாவுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி விட்டு நாடு திரும்பியுள்ளார்.

அதன்பின்னர், அவர் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை சந்தித்துள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

Leave a Reply