யாழ்ப்பாணத்திலுள்ள கமநல சேவைத் திணைக்களங்களுக்கு முன்னால் விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சனை, மேலும் பல பிரச்சினைகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கமநல சேவைத் திணைக்களங்களிற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
நல்லூர் பிரதேச கமநல சேவைத் திணைக்கள முன்றலில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தில் ஒழுங்குபடுத்தலில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இப் போராட்டம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.




