திடீர் சுற்றிவளைப்பில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

கொழும்பு கொஸ்கம – கஹபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட் ட விசேட சுற்றிவளைப்பில், கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதோடு, குறித்த கைக்குண்டு உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹபொல பிரதேசத்தை சேர்ந்த 41 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply