ஹற்றன், பொகவந்தலாவை கொட்டியாகல வத்த பகுதியில் நேற்று சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த 20, 24, 53, 60 மற்றும் 66 வயதுடைய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






