அறிவித்தலின்றி பயணித்த புகையிரதத்தால் பலியான மாடுகள்!

கொடிகாமம் பகுதியில், அறிவித்தலின்றி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு மாடுகள் பலியாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பரிட்சார்த்த சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதம் யாழ் நோக்கி பயணித்த போது, கூட்டமாக வந்த மாடுகளை மோதித் தள்ளியுள்ளது.

இச் சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த பதினான்கு நாட்களில் அனைத்து வகை அரிசிகளுக்கும் விலை அதிகரிப்பு!

Leave a Reply