சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்! தமிழக பொலிஸார் எச்சரிக்கை

சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு காணப்படுவதாக தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயத்தை இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய- இலங்கை மீனவர்களிடையே முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில்இ இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அனுமதி வழங்க வேண்டும் என இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இயந்திரப் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாகஇ குறித்த மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்இ இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்இ தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதை நிராகரிக்க முடியாது என தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளதாகஇ இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன்இ இந்திய மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இலங்கை கடற்படையினர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனஇ தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply