நடுவீதியில் கொடும்பாவி எரித்து போராட்டம் செய்த திருமலை விவசாயிகள்!

திருகோணமலை – சேருநுவர பிரதேச விவசாயிகள் தங்களின் விவசாய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் விரைவில் இரசாயன உரத்தினை பெற்றுத்தறுமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, சேருவில பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் ஒன்றினைந்து கவயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

சேருநுவர சந்தியில் இன்று திங்கட்கிழமை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்தும் தடைபட்டது.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்து கொண்டு, விவசாயம் மேற்கொள்ள உரத்தினை பெற்றுத்தா,அராஜக அரசியல் மற்றும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடு போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு, கொடும்பாவிகளும் ஏரித்து எதிர்ப்பினை வெளியிட்டார்கள்.

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம்! தமிழக பொலிஸார் எச்சரிக்கை

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுவேண்டி கீரிமலையில் கவனயீர்ப்பு!

முகமாலையில் இனந்தெரியாத குழுவினரால் சரமாரியாக தாக்கப்பட்ட நபர்!

அடுத்த இரு வாரங்களில் அனைத்து வகை அரிசிகளுக்கும் விலை அதிகரிப்பு!

கொல்லாதே கொல்லாதே விவசாயிகளை கொல்லாதே! துணுக்காய் பிரதேச விவசாயிகளும் போராட்டம்

Leave a Reply