<!–
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிரான திவி நெகும மோசடி குறித்த வழக்கை திரும்பப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக தொழில் நிபுணர்கள் தேசிய முன்னணி சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
குற்றப்பத்திரிகைகள் மீளப்பெற்றுக்கொள்வதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்ட நிலையில் இதேபோன்ற மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறித்த கடிதத்தில்சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
எனவே, அவரது அறிவுறுத்தலின் பேரில் திரும்பப் பெறப்பட்ட வழக்கின் எண்ணையும், திரும்பப் பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்திய முந்தைய வழக்கு எண்ணையும் வழங்குமாறு சட்டமா அதிபரை தொழில்நிபுணர்கள் தேசிய முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






