கிளிநொச்சி மாவட்ட தளபாட உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இக் கலந்துரையாடல் இன்று நடைபெற்றுள்ளது.
தளபாட உற்பத்திகளுக்கான மூலப் பொருட்களான மரங்களை எடுத்து வருவதில் காணப்படும் நடைமுறை சிக்கல்கள் உட்பட எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், இப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறும் தளபாட உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.







