ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!

மட்டக்களப்பில், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் மட்டு.ஊடக அமையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மூத்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, ஈகச்சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளர் பு.சசிகரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் முன்னணி ஊடகவியலாளரான நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன், அவரது தந்தை மற்றும் மருமகன் ஆகியோரும் இதன்போது படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply