மன்னார், பேசாலையில் சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் நேற்று இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்ளேவள மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்க ஆகியோர் தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அத்துடன், கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளமையோடு, பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேசாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






