விமல் – பசில் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் இரண்டு உறுப்பினர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற கொத்மலை பிரதேச அபிவிருத்தி கூட்டத்தின் போது வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலில் முடிவடைந்தது.

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ, பொதுஜன பெரமுனவின் சாமர சுபாஷன டி சில்வா ஆகியோரே கைகலப்பில் ஈடுபட்டனர்.

மேலும், அபிவிருத்தி பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு இந்த மோதலுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்கள் பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச இடையேயான வெளிப்படையான மோதல், தற்போது கட்சி உறுப்பினர்களிடையே கூட பரவியிருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply