லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

பொலன்னறுவை, பஹமுன, லக்கல பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவ் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த குறித்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பில், லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply