ஆசிரியர்கள் எடுத்த முடிவு மிகச் சரியானது! ரில்வின் சில்வா

ஆசிரியர், அதிபர்கள் மற்றும் விவசாயிகளினதும் போராட்டமும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானது. எனவே அவர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அதனைத் தெரிவித்தார்.

மேலும், ஆசிரியர்களுக்கு எதிராக செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களுக்கு எதிராக கருத்துரைக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிலா கல்வி கற்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

அத்தோடு, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை தொடங்க ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவை அனைத்து மக்களும் பாராட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply