சதுரங்க போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவர்கள்!

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் தேசிய சதுரங்க சாம்பியன் போட்டிகளின் 2ஆம் கட்டமாக வடக்கு வலயத்திற்கான மேஜர் சுற்றுப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இவ் வடக்கு வலயத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இப்போட்டிகளில் திறந்த பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லாரியைச் சேர்ந்த சிவதனுஜன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்துடன், யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஆர்த்திகன் 2ஆவது இடத்தையும், யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆருத்திரன் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவுப் போட்டிகளில் யாழ்.வேம்படி பெண்கள் பாடசாலையை சேர்ந்த திஸானுகா முதலிடத்தைப்பெற்று கொண்டார்.

அத்துடன், யாழ் வேம்படி பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த நர்த்தவி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply