ஏழு கோடி ரூபாய் பெறுமதியான 4 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தங்க கட்டிகளை விமான நிலையத்திலிருந்து வெளியில் எடுத்து செல்ல முயற்சித்தபோதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விமான நிலைய சுத்திகரிப்பு பணியில் ஈடுபடுபவர் என்றும் சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திலிருந்து தங்க கட்டிகளை தனது ஆடைக்குள் மறைத்து எடுத்து செல்ல முயற்சித்தபோது, சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போதே, தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவின் பிரதி பணிப்பாளரும் ஊடகப்பேச்சாளருமான சுதத்சில்வா தெரிவித்துள்ளார்.






