சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களை பார்வையிட்ட சுமந்திரன் எம்.பி!

பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அரசால் வழங்கப்படும் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் சில இடங்களில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதுதொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.

அடிப்படையில், இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மருதங்கேணி, பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் மணல் திட்டு பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளர்.

இதுதொடர்பில், அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.

இவ் விஜயத்தின் போது, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் அப்பகுதி பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் சமூகமளித்திருந்திருந்தனர்.

Leave a Reply