கொரோனாத் தொற்றால் மேலும் 18 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 18 பேர் நேற்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,543 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 360 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனாத் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 493,674 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply