சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்து, விலை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா கலந்துகொண்டிருந்தார்.
விலை அதிகரித்து மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டார்.
இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றினை அணிந்தும் தனது எதிர்ப்பினை இன்று வெளியிட்டார்.
மக்கள் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தினை சபையில் கடுமையாக விமர்சித்தார்.
;இதேவேளை, பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.










