யாழில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்த வட மாகாண ஆளுநர்!

வடக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்றுள்ள ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு, இன்று காலை முப்படையினர் மற்றும் பொலிசாருடன் வருகை தந்த வடக்கு ஆளுநர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், காங்கேசன் துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள்,கடற்படை, விமானப் படை, இராணுவ அதிகாரிகளிடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

எனினும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply